Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிஎஃப்ஓவாக அக்சித் சவுத்ரி நியமனம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சிஎஃப்ஓவாக அக்சித் சவுத்ரி நியமனம்

வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டத்தில் அக்சித் சவுத்ரியின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை நிதி அதிகாரியாக அக்சித் சவுத்ரி (40) நியமிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 1-ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்க உள்ளார்.

தற்போது தலைமை நிதி அதிகாரியாகப் பொறுப்பு வகித்து வரும் துணைப் பொது மேலாளர் மாதவ் சந்திர ஜா, இந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்படுகிறார். கடந்த 27-ம் தேதி நடைபெற்ற வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டத்தில் அக்சித் சவுத்ரியின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.


புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அக்சித் சவுத்ரி, வங்கி மற்றும் நிதித் துறையில் சுமார் 15 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இதற்கு முன்பு பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பி.டபிள்யூ.சி. எஸ்டிசி மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். தணிக்கை, ஒருங்கிணைந்த கருவூல மேலாண்மை, கிளை நிர்வாகம் மற்றும் மண்டல நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அனுபவம் பெற்றுள்ளார்.


மேலும், லண்டன் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகமும் எம்.டி.ஐ. நிறுவனமும் இணைந்து நடத்திய இயக்குநர் குழுத் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். 

புதிய தலைமை நிதி அதிகாரி நியமனம் குறித்த தகவலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செபி விதிமுறைகளின்படி, மும்பை பங்குச் சந்தை தேசிய பங்குச் சந்தை ஆகியவற்றுக்குத் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி
போட்டி தேர்வுகளில் இளைஞர்களுக்கு உதவும் நூலகங்கள்
அடுத்த செய்தி
நவம்பர் 4-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: நாளை எப்படி?

தொடர்புடைய செய்திகள்